பழங்கள் மற்றும் காய்கறிகள் உணவின் முதன்மை பகுதி
நோய் இல்லாத ஆரோக்கியமான உடலைப் பெற அனைவரும் விரும்புவோம். அப்படி விரும்பினால் மட்டும் போதாது, காய்கறிகள், பழங்கள் என்று நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
குறிப்பாக அன்றாட சமையலில் பயன்படுத்தும் காய்கறிகளில் அத்தியாவசிய சத்துக்களான பொட்டாசியம், நார்ச்சத்து, போலேட் மற்றும் வைட்டமின்களில் ஏ, ஈ மற்றும் சி போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளன. இத்தகைய சத்துக்கள் அனைத்தும் ஒவ்வொருவருக்கும் மிகவும் இன்றியமையாதது.
மேலும் இந்த சத்துக்கள் அனைத்தும் ஒரே காய்கறியில் இருக்காது. ஆகவே அனைத்து விதமான காய்கறிகளையும் உணவில் சேர்க்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, ஒவ்வொரு காய்கறியிலும் ஒவ்வொரு சக்தியானது உள்ளது. இயற்கை உணவுகளில் உள்ள சத்துக்கள் உடலை நேரடியாக சென்றடைகின்றன. பழங்களை உண்ணும் போது அவற்றில் உள்ள உயிர் சத்துக்களும், தாதுப்பொருட்களும் ரத்தத்தில் கலந்து உடலை ஆரோக்கியமானதாக மாற்றுகிறது.